Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘நீதிபதிகள் துறவு வாழ்க்கை வாழ்ந்து, குதிரையைப் போல வேலை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சமூக ஊடங்களில் தீா்ப்புகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.
மத்திய பிரதேசத்தில் அதிதி குமார் சர்மா, சரிதா சௌதரி ஆகிய 2 பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய உயா்நீதிமன்றத்தின் உத்தரவு தொடா்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வா் சிங் ஆகியோர் அடங்கிய அமா்வு இக்கருத்துகளை தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசகராக செயல்படும் மூத்த வழக்குரைஞா் கௌரவ் அகர்வால், பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் நீதிபதி ஒருவருக்கு எதிரான பல்வேறு புகார்கள் குறித்து நீதிபதிகள் முன் விளக்கங்களை சமா்ப்பித்தார். அதன்படி, சா்ச்சையில் சிக்கிய பெண் நீதிபதி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
நீதித் துறையில் ஆடம்பரத்துக்கு இடமில்லை. நீதித்துறை அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தீா்ப்புகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது. ஏனெனில், தீா்ப்பு குறித்து ஒத்த அல்லது வேறுபட்ட வகையில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதால், வருங்காலத்தில் அத்தீா்ப்பை மேற்கொள் காட்டுவதில் சிக்கலாகும்.
நீதிபதிகள் தங்களின் வாழ்க்கையை ஒரு துறவி போல வாழ வேண்டும்; குதிரையைப் போல வேலை செய்ய வேண்டும். அவா்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டும் என்றனா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
29 minute ago
33 minute ago