Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 26 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பிறந்தநாளுக்கு உறவினர்கள் மத்தியில் விலை உயர்ந்த பரிசுகள் வழங்காத கணவனை, மனைவி அடித்தே கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்துள்ளது.
புனே மாநகரின் வானவ்டி பகுதியில் அமைந்திருக்கும் செல்வந்தர்களுக்கான ஆடம்பர குடியிருப்பு பகுதியில், நேற்றிரவு (25) இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த குடியிருப்பின் வீடொன்றில், நிகில் கன்னா - ரேணுகா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்
கணவரை விட 2 வயது மூத்தவரான மனைவி என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காதல் மணம் புரிந்திருந்துள்ளார்.
நேற்று நடைப்பெற்ற (25) தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை, உறவு - நட்புகள் புடைசூழ துபாயில் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என மனைவி கேட்டுள்ளார்.
இதன்போது, அது பணம் மற்றும் நேரத்தை விரையமாக்கும் என்பதால் பிறந்தநாளை பிரம்மாண்டமாக மும்பையில் கொண்டாடலாம்’ என்று கணவன் தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையிலான வாய்த்தகராறு முற்றிய சந்தர்ப்பத்தில் கணவரின் மூக்கில் பலமாக குத்தியுள்ளார்.
இந்தநிலையில் கணவரின் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் பெருக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிஸாரின் விசாரணையில் சண்டை நடந்ததையும், கணவருக்கு தாக்கியமை தொடர்பில் மனைவி ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago