2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 23 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரை இந்தியா நீடித்துள்ளது.

காஷ்மிரின் பஹல்ஹாமில் ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் திகதி முதல் இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதேவேளை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்தமையைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் பரப்பில் பறக்க ஏப்ரல் 24ஆம் திகதி பாகிஸ்தான் தடை விதித்திருந்த நிலையில், அத்தடையும் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X