Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்ட சிறப்பு ரயில் மீது பயணிகள் கற்களை வீசி ஜன்னல்களை உடைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜான்சி ரயில் நிலையத்திலிருந்து, திங்கட்கிழமை (27) இரவு பிரயாக்ராஜூக்கு புறப்பட்ட ரயில் ஹர்பால்பூரை வந்தடைந்தது. இதையடுத்து, ரயிலில் ஏற ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது ரயில் கதவுகள் வெகுநேரமாகியும் திறக்காததால் கோபமடைந்த பயணிகள் ஜன்னல்கள் மீது கற்களை வீசினர். இதனால் ரயிலுக்குள் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பொலிஸார் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
3 hours ago
4 hours ago