Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. மேலும் காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். இந் நிலையில் மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
16 minute ago
26 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
48 minute ago