Freelancer / 2023 நவம்பர் 15 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் உடன் தொலைபேசியில் பேசினேன். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தோடா அரசு மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், "JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து ட்ரங்கல் - அஸ்ஸார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது" என்று தெரிவித்துள்ளனர்.
30 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
54 minute ago