Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2023 நவம்பர் 09 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், சுற்றுவட்டாரத்தில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்குள்ள கண்மாயில் கலக்கிறது. இந்த கண்மாயில் இருந்து அருகில் உள்ள மறுகால் ஓடையில் அதிவேகத்தில் நீர் பாய்ந்தோடுகிறது.
இந்நிலையில், பஞ்சு போன்ற வெண்மை நிற நுரை உருவாகி, அவை மலைபோல் குவிந்து வருகிறது. இந்த நுரையானது காற்றில் பறந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. காற்றில் பறந்து, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago