Freelancer / 2024 மார்ச் 24 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஓட்டுநரை பொலிஸ் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 21ஆம் திகதி சென்னை மதுரவாயல் பகுதியில் பெண் ஒருவருடன் சாலையில் நின்று இரவு நேரத்தில் ராஜ்குமார் என்ற வாகன ஓட்டுநர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த ரிஸ்வான் என்ற தலைமை பொலிஸ்காரரின் விசாரணையின் போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜ்குமாரை பொலிஸ்காரர் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அவர், மயங்கி கீழே விழுந்த நிலையில், அவருடன் இருந்த பெண், நண்பர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, ஓட்டுநர் ராஜ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், பொலிஸ் தாக்கியதில் ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழக்கும் வகையில் தாக்குதல் நடத்திய அவர் கைது செய்யப்பட்டதோடு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். S
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026