Freelancer / 2025 மே 11 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டிய மாநிலம் பிரஹன் மும்பை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பட்டாசுகள் மற்றும் ரொக்கெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாக். துணை பிரதமரும் உறுதிப்படுத்தினர். இருநாட்டு தலைவர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பிரஹன் மும்பை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பட்டாசுகள் மற்றும் ரொக்கெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு மும்பை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
அந்த உத்தரவின்படி, மே 11ஆம் திகதி முதல் ஜூன் 9ஆம் திகதி வரை எந்தவொரு நபரும் பிரஹன் மும்பை எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago