Freelancer / 2024 ஜூலை 07 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீஹாரில் உள்ள 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் நேற்று 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீஹார் மாநிலத்தின் ஜெஹனாபாத், மாதேபுரா, கிழக்கு சம்பரான், ரோக்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இந்த மரணங்கள் நேர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜெஹனாபாத்தில் 3, மாதேபுராவில் 2, கிழக்கு சம்பரான், ரோக்தாஸ், சரண் மற்றும் சபால் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.S
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026