2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

“மீனவர்கள் கைது தொடர்பில் தலையிட வேண்டும்”

Mithuna   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்தும், படகுகளை இலங்கை அரசு நாட்டுடமையாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்புக் கொடியை கட்டி 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை மேற்கொள் காட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும். 3 மீனவர்கள் அநியாயமாக நீண்ட காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்” என அந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X