Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு அனுப்பினார். இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த்ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சராக வியாழக்கிழமை (07) ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago