2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா அரு​கிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்​ளது. இங்கு மிக​வும் பழமை​யான முஸ்​லிம்​களின் தர்கா உள்​ளது. முகலாயர் ஆட்​சிக்​கால இந்த கட்​டிடத்​தின் உள்ளே நவாப் அப்​துஸ் சமது என்​பவரின் புனித சமாதி உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை தோறும் முஸ்​லிம்​கள் வந்து வணங்​கிச் செல்​வது வழக்​கம். இந்த இடம் உத்தரப் பிரதேச அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்​பரா மங்கி (தேசிய சொத்​து) என்று அதி​காரப்​பூர்​வ​மாக பதிவு செய்​யப்​பட்ட கல்​லறை​யாக உள்ளது.

இந்​நிலை​யில் பாரதிய ஜனதாக் கட்சி, பஜ்ரங் தளம் உள்​ளிட்ட இந்​துத்​துவா அமைப்​பினர், ‘‘இந்த தர்​கா, ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்டு கட்டப்பட்​டுள்​ளது. எனவே இந்த இடம் இந்​துக்​களுக்கு சொந்​த​மானது. இதனுள் இருக்​கும் கட்​டமைப்​புக்​குள் தாமரை மலர் மற்​றும் திரிசூலம் இருப்​பதே கோயிலுக்​கான ஆதா​ரங்​கள்’’ என்று சர்ச்​சையை கிளப்​பினர். மேலும் இந்​துத்​துவா அமைப்​பு​களின் திரளான தொண்​டர்​கள் பாது​காப்​புக்கு இருந்த பொலிஸாரை மீறி தர்​கா​வில் புகுந்​து திங்கட்கிழமை (11) சேதப்​படுத்தினர். இதையடுத்து பொலி​ஸார் அனை​வரை​யும் அங்​கிருந்து விரட்டி அமை​தியை ஏற்​படுத்​தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X