A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்குவங்கம்
மேற்குவங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். மாநிலத்தில் நேற்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், இன்று அவர் அடுத்தக்கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 29ஆம் திகதி வரை 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 4ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 76.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி, 45 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 22 ஆம் திகதி 6ம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 26ல் 7 மற்றும் ஏப்ரல் 29ல் 8ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அமித் ஷா இன்று மாநிலம் முழுவதும் 6 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
12 minute ago
20 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
35 minute ago
49 minute ago