Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஊர்வலமாக வந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மலர் தூவி பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது மலர் தூவிய போது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது. இதை மத்திய மந்திரி எல்.முருகன், தலைவர் அண்ணாமலை பார்த்து பதறினர்.
இதை கவனித்த பிரதமர் மோடி தனது பாதுகாவலரிடம் சைகை காட்டி செல்போனை எடுக்க கூறினார். அவர் ஜீப் மீது ஏறி செல்போனை எடுத்து அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் மலர் தூவும்போது செல்போன் தவறி விழுந்தது தெரியவந்தது. அதன்பிறகு உரியவரிடம் செல்போனை ஒப்படைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago