Freelancer / 2024 நவம்பர் 18 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம் - பண்டி மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்
பக்தர்களை புனித யாத்திரை அழைத்து சென்ற பஸ் ஒன்றே, ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். அவர்கள் யாத்திரையை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, லால்சாட்- கோடா மேகா நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்ப்பதற்காக சாரதி பஸ்ஸை திருப்பினார்.
இதன்போது வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இருந்த அரவிந்த் சிங்(62), அந்திம்குமார் (28), பஸ் நடத்துனர் மங்கிலால் ரத்தோர்(60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பயணிகள் காயமடைந்தனர்.
9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 Feb 2026