Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னராட்சி முடிந்துவிட்டாலும், பெயரளவில் இன்றும் சில மன்னர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்கள் கையில் ஆட்சி இல்லையென்றாலும், தங்களது மரபுகளையும் வழக்கங்களையும் இன்றும் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் மன்னர் பரம்பரையின் சொத்துக்கள் உள்ளன.
அப்படியான மன்னர் குடும்பத்தில் இருந்துவந்து இன்றும் ரூ.4500 கோடி மதிப்புள்ள (இந்திய பெறுமதி) அரண்மனையில் ஒருவர் ராணியாக வாழ்ந்து வருகிறார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தான் ராணியாக ஒரு பெண் வாழ்ந்து வருகிறார். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் சிந்தியா குடும்பம் அரச குடும்பம். நீண்ட வரலாற்று கொண்ட சிந்தியா குடும்பம் இன்றும் அரச குடும்பமாக வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பம் தற்போதைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தக் குடும்பத்தில் இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராக உள்ளார். இந்த, சிந்தியா குடும்பத்தின் இளவரசியான அனன்யா ராஜே சிந்தியா தான் குவாலியரின் ரூ.4,500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் இன்றும் ராணியாக தான் வாழ்ந்து வருகிறார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிரியதர்ஷினி ராஜே ஆகியோரின் மகள் தான் அனன்யா என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .