A.K.M. Ramzy / 2021 ஜூன் 14 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேசிய முன்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மர்ம நபர், 'விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக' கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.
இதற்கு முன்னதாக நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விஜய் என பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. முதலமைச்சர் வீட்டுக்கும் மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அது புரளி என தெரியவரும். இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வந்த நிலையில், இதன் பின்னணியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞர் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், அவரை பொலிஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே வாலிபரா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
12 minute ago
27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
27 minute ago
41 minute ago