Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலும்பு முறிவு பிரச்சினையால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றும், பிரசாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறும் கோரி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.,) தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: புதுடெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சினையுடன் இருந்து வருகிறேன்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும் கூட இன்னும் எனக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரசசாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026