2025 மே 17, சனிக்கிழமை

17 பேரின் உயிரைப் பறித்த இறுதி ஊர்வலம்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் அண்மையில் இடம்பெற்ற  இறுதி ஊர்வலமொன்றில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்தவரின்  உடலை வீதியின் ஓரத்தில் வைத்துவிட்டு  ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் இறுதி அஞ்சலிச் சடங்குகளைச்  செய்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வீதியில்வந்து கொண்டிருந்த கனரக வாகனமொன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இறுதி சடங்கில் பங்கேற்றவர்களின்  கூட்டத்திற்குள் பாய்ந்தது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர். பலர் கனரக வாகனத்தின் சக்கரங்களில் சிக்குண்டனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர் எனவும், 22 பேர்  படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சிகிச்சைபெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும்  அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .