Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக் கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் 2 அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
48 minute ago