Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 29 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியர் ஒருவர் பணியில் இருந்தபோது, சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே (வயது 74), தலைநகர் பாரீசில் உள்ள அரசு வைத்தியசாலையில் குழந்தைகள் நல வைத்தியராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் அரசு வைத்தியராக இருந்தபோது தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஏராளமான சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஜோயல் லேவை கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 ஆண்டுகளாக பாரீசில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். தற்போது விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜோயல் பணியில் இருந்தபோது சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago