2025 மே 14, புதன்கிழமை

“அரபு நாட்டினரை தடை செய்வேன்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார். ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்தரவுகளை நீக்கி விட்டார்.

அடுத்த வருடம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.

அப்போது, “2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன். பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன்.
என டிரம்ப் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X