Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரில் ஆசனப்பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரிஷி சுனக் அண்மையில், பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார்.
இந்நிலையில் குறித்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் ஆசனப் பட்டி' அணியாமல் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இவ்வீடியோவானது வைரலானதைத் தொடர்ந்து ”பிரதமரே ஆசனப் பட்டி அணியாமல் காரில் செல்கின்றார்” எனப் பலரும் விமர்சித்திருந்தனர். இதற்கு ரிஷி சுனக் கும் மன்னிப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆசனப்பட்டி அணியாமல் காரில் பயணித்தமைக்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
2 hours ago
4 hours ago