Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 04 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய குற்றத்துக்காக சீன ஆராய்ச்சியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியானை (வயது 33) காண்பதற்காக கடந்த ஜூலை மாதம் 2024ம் ஆண்டு ஜியாவின் காதலன் யோங் லியு (34) அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு லியு வந்தடைந்தார். அப்போது எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறையினருடன் இணைந்து விமான நிலையம் வந்த லியுவிடம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு கடத்தி வந்ததாகவும் இந்த நோய்க்கிருமி 'வேளாண் பயங்கரவாத ஆயுதம்' என்று விவரிக்கப்படும் ஒரு பூஞ்சை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர்களில் "கருகல்" ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகிறது.
இதில் புசேரியம் கிராமினேரம் எனப்படும் பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் ஒரு நோயை ஏற்படுத்தும், இது உணவில் கலந்தால் பயிர்களை அழித்து, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் ஆபத்தான நோய்கிருமியை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட லியுவை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனை அவரது காதலியின் ஆராய்ச்சிக்காக லியு இதனை கொண்டு வந்ததாக தெரியவந்ததை அடுத்து, யுன்கிங் ஜியானும் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடத்து வருகிறது.
22 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago