2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.36 மணிக்கு 5.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வடமேற்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தின் மையம் ஹெராட் நகரின் வடமேற்கே 30 கி.மீ தொலைவில் இருந்தது. ஹெராட் நகரம் ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X