2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல்

Freelancer   / 2024 நவம்பர் 18 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வட பிராந்தியத்தின் சிசேரியா நகரில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலை யாரும் பொறுப்பேற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X