2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை ஆரம்பம்

Freelancer   / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் மூடிய அறைக்குள் ஆரம்பமாகியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன், இஸ்ரேலிய தூதுவர் யெச்சீல் லைட்டர்  மற்றும் லெபனான் தூதுவர் நடா ஹமாதே முவாத் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னதாக மூவரும் இணைந்து புகைப்படங்களுக்குத் தோன்றிய போதிலும், அங்கிருந்த செய்தியாளர்கள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் மௌனம் காத்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் ஒரு சூழலில் நடைபெற்று வருவதால், இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .