Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 14 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்க மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களும் 24/7 அவசர தொடர்பு இலக்கங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அவசரநிலை தொடர்பான விடயங்களுக்கு மாத்திரமே இந்த தொடர்பு இலக்கங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இலங்கைத் தூதரகம் - இஸ்ரேல்
+94 71 844 7305 - துணைத் தூதரகத் தலைவர்
+94 71 683 3513 - ஆலோசகர் (தொழிலாளர் நலன்)
+94 71 974 2095 - செயலாளர் (தொழிலாளர் நலன்)
இலங்கைத் தூதரகம் - தெஹ்ரான்
+98 939 2055161 - கே.ஜி.யு. லக்மால், பொறுப்பாளர்
(R)
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago