2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உக்கிரமடைந்து வரும் உக்ரேன்- ரஷ்யப் போர் ; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 16 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

 இந்நிலையில் அண்மையில்  ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு வெற்றி கிட்டி வருவதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேன் மீது நேற்றைய தினம் மாத்திரம் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்  வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து இது மிகப்பெரிய தாக்குதல் எனவும் உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் 85 ஏவுகணைகள் ரஷ்யத் தரப்பில் இருந்து ஏவப்பட்டதாகவும், தங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்  உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் மின்நிலையங்களைக்குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டதால் 70 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இத்தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ரஷ்யா ஏவிய ஏவுகணைகளில் இரண்டு ஏவுகணைகள் உக்ரேனை அடுத்த போலந்தின் எல்லைப்பகுதியில் விழுந்தததில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்  ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை எனப்  போலாந்து குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X