Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 26 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் அட்டாக் பொலிஸ் நிலைய எல்லையில் உள்ள மர்ரி கிராமத்துக்கு அருகே உள்ளூர் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர், அவரது துப்பாக்கிதாரி மற்றும் சாரதி ஆகியோர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அர்ஷத் ஜாஃபரி தனது சாரதி அக்தர் நவாஸ் மற்றும் துப்பாக்கிதாரி நஜாம் கான் ஆகியோருடன் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அட்டாக் மாவட்ட பொலிஸ் அதிகாரியைச் சந்தித்து, தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்த விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் மாரி கிராமத்துக்கு அருகே வந்தபோது, ஆயுதம் ஏந்திய நான்கு பேர் காரில் வந்து துப்பாக்கியால் சரமாரியாக சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பினர்.
சம்பவ இடத்தில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமை வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தகவலின் பேரில் மாவட்ட பொலிஸ் அதிகாரி ஃபசல் ஹமீத் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பை கண்காணித்ததுடன், குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago