2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

எலோனின் உயிருக்கு ரஷ்யாவால் ஆபத்து?

Ilango Bharathy   / 2022 மே 10 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

அதே சமயம் உக்ரேனுக்கு உதவும் வகையில் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும் ,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான  எலோன் மஸ்க் (Elon musk) ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்  இணைய சேவையை உக்ரேனில் செயற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் எலோன் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 எலோன்  மஸ்க் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவின் மூலமே  இச் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பதிவில் “ நான் மர்மமான முறையில் உயிரிழக்கலாம்” எனப்  பதிவிட்டுள்ளார்.

 இந்நிலையில் உக்ரேனுக்கு  உதவியதற்காக ரஷ்யாவால் எலோன் மஸ்கின்  உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து  மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X