Freelancer / 2026 மார்ச் 03 , மு.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்டார் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஈரானின் இரண்டு SU-24 ரக போர் விமானங்களை கட்டாரின் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஈரானினால் ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 5 ஆளில்லா வானூர்திகளையும் கட்டார் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. (a)

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026