2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

கத்தார் - தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் இயக்கத் தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கு முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல், ஹமாஸ் அரசியல் தளம் அமைந்துள்ள கத்தாரையும் தனது இலக்காகக் கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். 

ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டிய கத்தாரின் அல் ஜசிரா தொலைக்காட்சி, இந்தத் தாக்குதல் ஹமாசின் காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தியோர்மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .