Freelancer / 2023 ஜனவரி 11 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிக்க கனடா எடுத்துள்ள தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று காலை கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நால்வருக்கும் கனடாவில் குடியேற்றவோ அல்லது அகதிகள் பாதுகாப்போ கிடைக்காது என கனேடிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
மேலும் அவர்களால் கனடா அல்லது அதன் குடிமக்களுடன் எந்த வியாபாரத்திலும் ஈடுபட முடியாது.
கனடாவில் அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏதும் இருந்தால் அவை தடை செய்யப்படும் என்றும் கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago