2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கனடாவில் விமான விபத்து: 19 பேர் காயம்

Editorial   / 2025 பெப்ரவரி 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம்  ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு 76 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்தது.

டொரன்டோ நகரில் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது.

அதில் இருந்த 80 பேரில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் உரிய பரிசோதனைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு பனிப்பொழிவு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து கனடா மற்றும் அமெரிக்காவில் விசாரணைகளுக்காக டெல்டா ஏர் லைன்ஸ் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. (S.R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X