Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 26 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கழிவறையில் அமர்ந்தவாறு தொலைபேசியைப் பயன்படுத்திய இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் சப்ரி தசாலி. 28 வயதான இவர் தினமும் கழிவறையைப் பயன்படுத்தும்போது தனது தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் சப்ரி தசாலி கழிவறையில் அமர்ந்தவாறு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மலைப்பாம்பு ஒன்று சப்ரி தசாலியின் பின் புறம் தீண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சற்றும் எதிர் பாராத அவர் பாம்பை பிடித்துக்கொண்டே அலறியடித்துக் கொண்டு கழிவறையை விட்டு வெளியே ஓடியுள்ளார் எனவும் அதன் பின்னர் அப்பாம்பைப் பிடித்து வீசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இ உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மலைப்பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர் எனவும், மலைப்பாம்பு விஷத்தன்மை கொண்டது இல்லை என்பது தெரிந்த பின்னரே சப்ரி தசாலி நிம்மதியடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”தனது குடும்பம் 40 வருடங்களாக வசித்து வரும் இந்த வீட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை” என சப்ரி தசாலி தெரிவித்துள்ளதுடன் இது குறித்த புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .