Freelancer / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசா முழுவதும், தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
இதனால் காசாவில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலுக்கு அமைய, இஸ்ரேல், காசாவில் இனப்படுகொலை செய்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்த நிலையிலேயே, இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது, 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் உள்ள சிறுவர் மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பலஸ்தீனிய மக்கள் வெளியேறுவதற்கு மேலும் 48 மணி நேரம் வீதியை திறந்துவிடுவதாக இஸ்ரேல் இராணுவம் இன்று அறிவித்துள்ளது. R
24 minute ago
28 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
33 minute ago
48 minute ago