2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன அரசின் முகவராக செயற்பட்ட தொழிலதிபர் மீது வழக்கு

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கத்தின் முகவராக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட லாஸ் வேகாஸ் மற்றும் மக்காவ் கசினோ தொழிலதிபர் ஸ்டீவ் வைன் மீது அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

வின் ரிசோட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னர் பணியாற்றிய அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஹோட்டல் அதிபர், ஸ்டீபன் ஏ. வைனை கட்டாயப்படுத்தி சீனாவின் முகவராகவும், பிஆர்சியின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியாகவும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும்படி வற்புறுத்தப்பட்டுள்ளது.

கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த ஊடக அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திணைக்களத்தால் முகவராகப் பதிவு செய்யுமாறு வைன் அறிவுறுத்தப்பட்ட போதும்  அவ்வாறு செய்ய அவர் மறுத்துள்ளார்.
 
வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முதல் உறுதியான சிவில் வழக்கு - நமது ஜனநாயக அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான துறையின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது என நீதித்துறையின் தேசிய பாதுகாப்பு பிரிவின் உதவி சட்டமா அதிபர் மேத்யூ ஜி. ஓல்சன் கூறினார்.
  
அமெரிக்காவில் கொள்கை தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்த ஒரு வெளிநாட்டு அரசாங்கம்  ஓர் அமெரிக்கரை தனது முகவராகப் பயன்படுத்தினால், வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டம் அமெரிக்க மக்களுக்குத் தெரிந்துகொள்ளும் உரிமையை வழங்குகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

சன் மற்றும் பிற பிஆர்சியின் அரசாங்க அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது பற்றி வெள்ளை மாளிகை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பலமுறை வைன் கலந்துரையாடியுள்ளார்.

மக்காவ்வில் தனது வணிக நலன்களைப் பாதுகாக்கும் விருப்பத்தின் காரணமாக பிஆர்சியின் வேண்டுகோளின்படி வைன் செயல்பட்டதாக திணைக்களம் குற்றம் சாட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .