Freelancer / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள், பிரான்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரபல சமூகவலைதள செயலியான 'டிக்-டாக்' தனியுரிமையை மீறுவதாக, கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன.
இதற்கிடையே, பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து, குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதனால் 'டிக்-டாக்' செயலி புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது
28 minute ago
42 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
43 minute ago
53 minute ago