Freelancer / 2025 ஜூன் 04 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில், இன்ஸ்டாகிராம், டிக்டொக் ஆகிய சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுபடுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசப் (17), இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். இவர் பெண்கள் உரிமைகள், கல்வி குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் கருத்துகள், உள்ளிட்டவை பற்றி பதிவிட்டு வந்தார். அவரை சமூக வலைதளங்களில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில், ஜூன் 2ஆம் திகதி திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்.
துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு அந்த நபர் சனா யூசப்புடன் பேசிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது கௌரவக்கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago