Mayu / 2026 ஏப்ரல் 12 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஈரான் Hormuz நீரிணையை திறக்க வேண்டும் என்று முன்பே வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் பதற்றம், பாதிப்பு ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதனால் அமெரிக்க கடற்படை உடனடியாக Hormuz நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடும் செயல்முறையை அமெரிக்கப் கடற்படை உடனடியாகத் தொடங்கும்.
ஒரு கட்டத்தில், ' அனைத்து கப்பல்களும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படும்' என்ற நிலையை நாம் எட்டுவோம், ஆனால் ஈரான் இந்த சுதந்திரத்தை பாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு கட்டணம் செலுத்திய எந்த கப்பலும் சர்வதேச நீர்பரப்பில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அந்த கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
பேச்சில் ஈரான் தனது அணு ஆசைகளை கைவிடத் தயாராக இல்லை. எனது பிரதிநிதிகள் மரியாதையுடன், நட்பாக நடந்துகொண்டனர். ஈரான் பிரதிநிதிகளும் அப்படியே இருந்தனர். ஆனால் முக்கியமான விஷயத்தில் அவர்கள் தளரவில்லை.
நான் பல ஆண்டுகளாகச் சொல்வதைப் போலவே, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.
வோஷிங்டன் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கா இராணுவம் "பொருத்தமான தருணத்தில்" ஈரானின் இராணுவ திறன் / அணு திட்டம் போன்றவற்றை கடுமையாக தாக்கும் என்றும் மேலும் கூறியுள்ளார்.
34 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago