Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாரிகிக்கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காசா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து சுமார் 14 நாட்களாக இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
ஏவுகணைகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், காசா எல்லையில் சிறப்புப் படையினர் தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தரைவழித்தாகுதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
13 May 2025