Ilango Bharathy / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டுப் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், பல்கலைக்கழகங்களில் கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும், ஜிம் மற்றும் பூங்காவுக்குச் செல்வதற்கும் தலிப்பான்கள் தடை விதித்திருந்தமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் தலிபான்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த சில உதவித் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக தலிபான்கள் தொடர்ந்து செயற்பட்டு வந்தால், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் முக்கிய உதவிகள் பல இடைநிறுத்தப்படுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago