Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது.
இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது.
கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக் கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.
தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த சூழலில் கடந்த 24-ம் திகதி தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மிகக் கடுமையான பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடந்த 25-ம் திகதி தாய்லாந்து, கம்போடியா எல்லையின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல் வெடித்தது. கம்போடியாவின் 7 இடங்களை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மூன்றாவது நாளாக இருநாடுகளுக்கும் இடையே நேற்றும் அதிதீவிரமாக போர் நடைபெற்றது.
கடந்த 3 நாட்கள் போரில் தாய்லாந்தில் 6 ராணுவ வீரர்கள், 14 பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். கம்போடியாவில் 5 ராணுவ வீரர்கள், 8 பொதுமக்கள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.
4 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago