Editorial / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தை ஏப்ரல் 13-ஆம் திகதி திங்கள்கிழமை தொடங்கினார். வத்திக்கான் செய்தியாளர் இம்மானுவேல் மரியான் இது குறித்த விரிவான தகவல்களை வழங்கியுள்ளார்.
பயணத் திட்டம் மற்றும் வரவேற்பு: உரோமை நேரப்படி 9:00 மணிக்கு ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருத்தந்தை புறப்பட்டார். அல்ஜீரிய நேரப்படி காலை 10:00 மணிக்கு தலைநகர் அல்ஜியர்ஸில் உள்ள ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 10:45: மகாம் எச்சாஹித் (ஆயஙயஅ நுஉhயானை) தியாகிகள் நினைவிடத்தைப் பார்வையிட்டுஇ அங்கு வாழ்த்துரை வழங்குகினார்.
காலை 11:15: எல் மௌராடியா (நுட ஆழரசயனயை) ஜனாதிபதி மாளிகையில் அல்ஜீரியக் குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
நண்பகல் 12:00: ஜமா அல் ஜசீர் மாநாட்டு மையத்தில் அரசு அதிகாரிகள்இ சமூக அமைப்புகள் மற்றும் தூதரக உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
பிற்பகல் 03:45: அல்ஜியர்ஸின் பெரிய மசூதியைப் பார்வையிடுகிறார். இது மக்களிடையே நிலவும் ஆன்மீக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மாலை 04:35: பாப் எல் ஓயெத் பகுதியில் அமைந்துள்ள அகுஸ்தினார் மிஷனரி சகோதரிகளின் நட்புறவு மையத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்று கலந்துரையாடினார்.
மாலை 05:10: ஆப்பிரிக்கா அன்னை பேராலயத்தில் அல்ஜீரிய மக்களைச் சந்தித்துத் தனது ஆசியுரையை வழங்கினார். .
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago