Freelancer / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
மேற்படி பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைவரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த பிரேரணையை மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையில் நிறைவேற்றுவதற்கு தென்கொரியாவின் எதிர்க்கட்சி தவறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல் அவசரமாக இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
இதனையடுத்து, தென் கொரியாவின் சியோலில் உள்ள தேசிய பாராளுமன்றத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியை நீக்கம் செய்யக்கோரி ஒன்று திரண்டனர்.
இந்தநிலையில், குறித்த இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தவதற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
எனினும், ஜனாதிபதி யூன் சுக் யோல், இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக நேற்று பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன், மீண்டும் அதனை அமுல்படுத்தப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார். (a)

3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago