Ilango Bharathy / 2023 ஜனவரி 09 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வீதிவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங் பகுதியில் நேற்றைய தினம்( 08) நள்ளிரவு 1 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நஞ்சாங் பகுதியில் மூடுபனி நிலவுவதால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, கவனமாக ஓட்டவும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாமென்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஷெங்ஷூ நகரில் பனிமூட்டத்தால் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago