Freelancer / 2025 மே 20 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய தரப்பு கொள்கைகளை பற்றி எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ட்ரம்புடனான எங்களுடைய பேச்சுவார்த்தையின் வழியே நான் புரிந்து கொண்ட விசயம் என்னவென்றால், ரஷிய தரப்பு எங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்ப விரும்புகிறது என தெரிகிறது எனவும் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“போர் நிறுத்தம் மட்டுமின்றி அவர்கள் வேறு சில கொள்கைகளையும் விரும்புகிறார்கள். போர் நிறுத்தத்திற்கு ஒவ்வொருவரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அதற்கு ரஷியா தயாராக உள்ளதா என எனக்கு உறுதியாக தெரியவில்லை. நாங்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை.
“முதல் நடவடிக்கையாக போர் நிறுத்தம் வேண்டும். உண்மையில் போரை நிறுத்த தயாராக இருக்கிறார்கள் என அவர்கள் காட்ட வேண்டும். அதன்பின்னரே கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
“இதற்காக ரஷியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் தயாராக உள்ளது” என்றார்.
அத்துடன், இதேபோன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தெடர்ந்து தொடர்பில் இருப்பது பற்றியும் ஜெலன்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
10 minute ago
31 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
41 minute ago
50 minute ago