Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 மே 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும்,இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும், ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நீடித்த போர்பதற்றம், ஞாயிற்றுக்கிழமை (10) மாலை முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. இந்தியா, பாகிஸ்தான் இது பற்றி அறிவிப்பதற்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
இத்தகைய சூழலில்தான், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில், ட்ரம்பின் இத்தகைய பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago